மயன்
மயன் என்பவர் குமரிக்கண்டத்தின் சடைச்சங்கத்தில் உள்ள சங்கப்பலகையை செய்த சிற்பி. இவரின் சங்கப்பலகையிலேயே அகத்தியம், ஐந்திரம் போன்ற பழந்தமிழ் இலக்கிய நூல்கள் ஏற்றப்பட்டன.
|
மயன் வரலாறு
மயன் குமரி நாட்டில் பிறந்தவர். இவரது தாய் கருங்குழலியும் தந்தை திருமூலரும்(பதினெண் சித்தர்களுள் ஒருவரா என்று தெரியவில்லை) ஆவர்.
- மயன் பிறந்தநாள் - தைத்திங்கள் பௌர்ணமி
- லக்னம் - மகரம்
- நட்சத்திரம் - பூசம்
- ராசி - கடகம்[1]
மயனும் தமிழ்சங்கமும்
- மயன் தமிழ்ச்சங்கத்தில் இருந்தவர் என்பதை
- செந்தமிழ் இயக்கங்கண்டேன்
- மயன் சங்கப்பலகை செய்ததை
- அவைக்களப் பலகை கண்டு அருந்தமிழ் பலகை யாக்கி
- அவைக்களச் சான்றோர் வாழ்த்த அருந்தமிழ் பலகை ஏற்றி
- அவைக்கள வேந்தன் வாழ்த்த அருந்தமிழ் நூல்களெல்லாம்
- அவையுளோர் கண்க ளிக்க அரங்கேற்றி நின்றதன்றே -(ப.நூ.30)
கலைமூலன்
- மயனே தமிழர்களின் கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும், ஓவியக் கலைக்கும், வானியற் கலைக்கும், மரக் கலைக்கும் தந்தை ஆவான். அவன் எக்கலைகளிலும் வல்லவன் என்பதை பழந்தமிழ் கலை நூல்கள் சொல்கின்றன
.நூல் பதிவுகள்
மயன் பற்றிய மற்ற பதிவுகள்.- சிலம்பு
- மணிமேகலை
மயனின் முக்கிய நூல்கள்
- 1.செந்நூல்கள்
எண் | நூல் பெயர் | ஆங்கில மொழிபெயர்ப்பு |
---|---|---|
1. | ஓவியச்செந்நூல் | Treatise on drafting & painting |
2. | சிற்பமாச் செந்நூல் | Treatise on Iconometry |
3. | கட்டிடச் செந்நூல் | Treatise on Architecture |
4. | நிலமனைச் செந்நூல் | Treatise on house building based on the land quality |
5. | மனைநிலச் செந்நூல் | Treatise on land based on house building's nature |
6. | வானியல் செந்நூல் | Treatise on Astro - Physics |
7. | பெருநடச் செந்நூல் | Treatise on the Dance |
8. | மூலிகைச் செந்நூல் | Treatise on Herbs |
9. | கணிதமாச் செந்நூல் | Treatise on Mathematics |
10. | மரக்கலச் செந்நூல் | Treatise on Ship building |
11. | விண்கலச் செந்நூல் | Treatise on Space ship |
12. | ஏழிசைச் செந்நூல் | Treatise on Music |
- 2.பொது நூல்கள்
-
- 2.1.ஐந்திரம்
- 2.2.பிரணவ வேதம் (நான்மறைகளுக்கும் முற்பட்டது)
- 2.3.மயமதம் (கட்டிடவியல்-வாஸ்து)
- 2.4.சூரிய நூல் (வானியல்)
சிற்றம்பலச்சிற்பம்
- மயனின் நடராச சிற்பம் உணர்த்துவது
-
- ஐந்தொழிலையும் (படைத்தல்-மூலம், காத்தல்-சீலம், அழித்தல்-காலம், மறைத்தல்-கோலம், அருளல்-ஞாலம்), தனித் தொழிலாகச் செய்யும் மூலத்தின் வடிவமே நடராச திருவுரு என்கின்றான்.
மயனின் சீடர்கள்
எண் | பிரிவு | சீடர்கள் பெயர் |
---|---|---|
1. | தமிழ் | நாதன், ஆயன், மூலம், நூலன். |
2. | சிற்பம் | கீதன், போதன், வேதன், சீலன். |
3. | நளினக்கலைகள் | தூயன், மாயன், நேயன், வேலன். |
மயன் முக்கோண விதிக் குறிப்புகள்
- படக்குறிப்பு
- இது செங்கோண முக்கோணத்துக்கு மட்டுமே பொருந்தும்.
- தே=செம்பக்கம் (hypotenuse)
- சி =சின்னபக்கம்
- பெ=பெரிய பக்கம் (செம்பக்கம் தவிர்த்து)
- செய்முறை
- முதலில் சின்னப்பக்கத்தின் அலகை இரண்டால் வகுத்துக் கொள்ளுங்கள். (எ.கா. 3/2 =1.5)
- அடுத்து பெரியப்பக்கத்தின்(செம்பக்கம் தவிர்த்து) அலகை ஏழால் பெருக்கி வரும் விடையை எட்டால் வகுத்துக் கொள்ளுங்கள். (எ.கா. 4*7/8 =3.5)
- மேலுள்ள இரண்டு விடையின் கூட்டே செம்பக்கத்தின் நீளம். (எ.கா. 3.5 + 1.5 = 5 அலகுகள்)
No comments:
Post a Comment