Monday, January 10, 2011

திருவாடானை

 முதலில் எங்க ஊரப்பத்தி சொல்லி ஆரம்பிக்கிறேன்.....
 வணக்கம்...,

அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்

[Image1]





மூலவர் : ஆதிரத்தினேஸ்வரர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : சினேகவல்லி

தல விருட்சம் : வில்வம்

தீர்த்தம் : சூரிய புஷ்கரிணி

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருஆடானை

ஊர் : திருவாடானை

மாவட்டம் : ராமநாதபுரம்

மாநிலம் : தமிழ்நாடு

அட்ட வாயில்


அட்டவாயில் என்னும் ஊர் நெல்வயல் சூழ்ந்திருக்கும் ஓர் ஊர். அதில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். பல ஊர்களிலிருந்தும் மக்கள் அந்த விழாவுக்குச் செல்வர். விழாவில் ‘கலி’ என்னும் மகிழ்ச்சி ஆரவாரம் மிகுந்திருக்கும்.

பரத்தையுடன் வாழ்ந்த கிழவன் மனைவியை நாடி இல்லம் வருகிறான். தோழி அவனை வீட்டுக்குள் விடவில்லை. கிழவன் பிரிவால் அவனது மனைவி உடலில் தித்தி என்னும் ஊரல் தோன்றி நொந்து கண்ணீர் விடுகிறாள். அவளது கண்ணீரைப் போக்க முதலில் அவளை அட்டவாயில் நகரில் நடக்கும் திருவிழாவுக்கு அழைத்துச் செல்லும்படி தோழி வழிகாட்டுகிறாள். வழியில் கழனி வழியே செல்லும்போது நெல் கதிர்வாங்கியிருக்கும் அழகை அவள் அழகோடு ஒப்பிட்டுக் காட்டிப் பாராட்டிக்கொண்டே செல்லவேண்டும் என்றும் கூறுகிறாள். அவன் அழைத்துச் செல்வதை ஊர்மக்கள் கண்கொட்டாது பார்க்கவேண்டும் என்பதும் அவள் விருப்பம்.

பழையன் என்பவன் சோழனின் படைத்தலைவன் (‘சோழன் மறவன்’) அவன் உயர்த்திப் பிடித்த வேல் போல் ஊரார் கண்கள் பார்க்கவேண்டுமாம்.

அதிகை, கடவூர், கண்டியூர், குறுக்கை, கோவலூர், பறியலூர், வழுவூர், விற்குடி ஆகிய 8 ஊர்களைச் சைவர் வீரட்டானம் என்பர். இந்த வீரட்டானம் வேறு. அட்டவாயில் வேறு.

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவாடனை சங்ககாலத்தில் அட்டவாயில் என்னும் பெயருடன் விளங்கியது எனலாம்.

அட்டவாயில் என்பது போரிட்டு அழிக்கப்பட்ட வாயில் என்று பொருள்படும். ஆடு என்னும் சொல்லுக்கு வெற்றி என்னும் பொருள் உண்டு. அட்டு ஆடு பெற்ற ஊர் ஆடனை. ஆடனை என்பது சிறப்பிக்கப்பட்டுத் திருவாடனை ஆயிற்று.

திருக்கோயில் வரலாறு:
வருணனுடைய மகன் வாருணி. ஒரு நாள் இவன் துர்வாச முனிவரின் ஆசிரமத்தில் தங்கினான். முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது வாருணியுடன் வந்த நண்பர்கள் ஆசிரமத்தில் உள்ள பூ, பழங்களை வீசி எறிந்து துர்வாச முனிவரின் தவத்தை கலைத்தனர்.
துர்வாச முனிவர் கோபத்துடன், “”வாருணி! நீ வருணனின் மகனாக இருந்தும், பொருந்தாத காரியம் செய்து விட்டாய். எனவே பொருந்தாத தோற்றமான, ஆட்டின் தலையும் யானையின் உடலுமாக மாறுவாய்,”என சாபமிட்டார். ஆடு+ஆனை என்பதால் இத்தலம் வடமொழியில் அஜகஜபுரம் ஆனது.
தன் தவறை உணர்ந்தான் வாருணி. இவனது நிலை கண்ட மற்ற முனிவர்கள், சூரியனுக்கு ஒளி கொடுத்த தலம் பாண்டி நாட்டில் உள்ளது. அத்தலத்து இறைவனை வழிபாடு செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்று வாருணியிடம் கூறினர். அதன்படி வாருணியும் இத்தலத்தில் தன் பெயரால் குளம் அமைத்து தினமும் ஆதிரத்தினேஸ்வரரை வணங்கினார்.
இறைவனும் இவனது சாபம் நீக்கி, என்ன வரம் வேண்டும் எனக்கேட்க, கலிகாலம் முடியும் வரை இத்தலம் என் பெயரால் விளங்க வேண்டும் என வரம் பெறுகிறான். அத்துடன் பெரியவர்களிடம் மரியாதைக் குøறாவாக நடந்தால் என்ன நடக்கும் என்பதற்கு தான் ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்றும் கேட்கிறான்.
இறைவனும் அதற்கிசைந்து இத்தலத்தை “அஜகஜக்ஷத்திரம்’ ஆடு+ஆனை+புரம் என வழங்க அருள்புரிந்தார்.
இதுவே காலப்போக்கில் “திரு’ எனும் அடைமொழியோடு “திருவாடானை’ என ஆனது.

தலபெருமை:
பாண்டி நாட்டு பாடல் பெற்ற 14 தலங்களில் ஒன்று. அகஸ்தியர், மார்க்கண்டேயர், காமதேனு இங்கு வழிபட்டு சிறப்பு பெற்றுள்ளனர்.
அருணகிரிநாதர் தமது திருப்புகழில் இத்தல முருகனை, “சிற்றின்பம் கலக்காமல் பேரின்ப நிலையில்’ பாடியுள்ளார்.

ஒவ்வொரு தலத்திலும் ஒன்று சிறப்புடையதாக இருக்கும். ஆனால் இத்தலத்தில் மூன்றுமே சிறப்புடையது. மூர்த்தி சுயம்புலிங்கமாக ஆதிரத்தினேஸ்வரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர் என்ற பெயர்கள் உண்டு.
அம்மன் சிநேகவல்லி, அன்பாயிரவல்லி. தீர்த்தம் சூரியபுஷ்கரிணி, வருண, வாருணி, மார்க்கண்டேய, அகத்திய, காமதேனு தீர்த்தங்கள். அர்ஜுனன் வனவாசத்தின் போது பாசுபதாஸ்திரம் பெற்றபின் அதை எவ்விதம் உபயோகிப்பது என்று இறைவனிடம் கேட்க, அதற்கு இறைவன், “”திருவாடனைக்கு வா சொல்லித் தருகிறேன்”என்றார்.
அதன்படி அர்ஜுனனும் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு தெரிந்து கொள்கிறார். அதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இங்குள்ள சோமாஸ்கந்தரை அர்ஜுனன் ஸ்தாபித்தான் என்பது ஐதீகம்.
சூரியனின் கர்வம் போக்கிய தலம்: ஒரு முறை சூரியனுக்கு தான் மிகவும் பிரகாசமுடையவன் என்ற கர்வம் ஏற்பட்டது. இறைவனின் சிரசில் சூரிய ஒளி பிரகாசிக்க நந்தியினால் அந்த ஒளி இழுக்கப்பட்டு, சூரியனுக்கு சுய ஒளி போய்விட்டது. மனம் வருந்திய சூரியன், நந்தியிடம் பரிகாரம் கேட்டார்.
சுயம்பு மூர்த்தியாக திருவாடானையில் வீற்றிருக்கும் இறைவனை நீல ரத்தினக்கல்லில் ஆவுடை அமைத்து வழிபட்டால் சாபம் நீங்கும் என கூறினார். ஆதியாகிய சூரியன் நீலரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால், ஆதிரத்தினேஸ்வரர் என பெயர் வந்தது.
இவர் மீது உச்சிக்காலத்தில் பாலபிஷேகம் செய்தால் இறைவன் நீல நிறத்தில் காட்சியளிப்பார். சுக்கிரனுக்குரிய அதிதேவதை: அம்மன் சிநேகவல்லி சுக்கிரனுக்குரிய அதிதேவதை ஆவார். இத்தலம் சுக்கிரனுக்குரிய சிறப்புத்தலம்.
திருவிழா:
வைகாசி விசாகத்தில் வசந்த விழா 10 நாள், ஆடிப்பூரத்திருவிழா 15 நாள், நவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி.

முகவரி:
அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், திருவாடானை-623407. ராமநாதபுரம் மாவட்டம்.
+91- 4561 – 254 533.


நன்றிகளுடன்



ம. ராமச்சந்திரன்

1 comment: